Epigraphical Words from Tamil Inscriptions
Epigraphical Words from Tamil Inscriptions
This article explains the religious and administrative terms mentioned in Tamil inscriptions. Only specific terms found in Tamil inscriptions are selected and explained. There are many differences between the Tamil words of 1000 years ago and the words we use now. This is also explained in several parts.
Words in Tamil Inscriptions
1) அக்க சாலை- நாணயங்கள் அச்சடிக்கும் சாலை ( Coin Mint)
2) அக்கவரி- நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி ( Taxes on Coins)
3) அக்கன்- மூத்த சகோதரி தற்போது "அக்கா" என வழங்கபடுகிறது. (elder sister). முதலாம் ராஜராஜனின் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் "அக்கன்" என்னும் வார்த்தை வருகிறது.
4) அக்கார வடிசில்- சர்க்கரை பொங்கல் (SWEET rice) கோவில்களில் வழன்படும் பிரசாதத்தில் முக்கிய இடத்தை பெறும்.
5) அகம்படி பெண்டுகள்- அரண்மனை அந்தபுரத்தில் பணிப்புரியும் பெண்கள் ( WHO WORKED இன் WOMEN QUARTERS IN royal PALACE)
6) அங்கார தேவதை- பரிவார தேவதை (ATTENDENT DEITY)
7) அங்க சாலை- நடன சாலை ( TODAY WE CALL DANCING SCHOOL OR DANCING STUDIO)
8) அங்காடி கூலி- கடைகளுக்கு விதிக்கப்படும் வரி ( TAXES ON SHOPES)
9) அங்க ரக்ஷன்- அரசனை பாதுகாப்பவன் இன்றைய SPG போல. இவனை "மெய்காவலன்" என்றும் அழைப்பர்.
10) அணுக்கியர்- பெண் அந்தரங்க காரியதரிசி (women Personnel
secretary)
11) அதிகாரிச்சி- அதிகாரியின் மனைவி ( wife of Officer)
12) அந்தராளம்- கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தை இணைக்கும் பகுதி ( JOINING POINT OF SANCTUM SANCTORIUM and ARTHA MANDAPAM)
13) ஆவணக் களரி- ஆவணங்களை பாதுகாக்கும் இடம் ( PLACE OF PROTECTING DOCUMENTS)
14) ஆனைச் சாலை- யானைகள் கட்டிபோடும் இடம் (ELEPHANT PLACE)
15) இடைநாழிகை- அர்த்த மண்டபத்திற்கும் மகா மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதி.
16) இரத்தக் காணிக்கை- போரில் இருந்த வீரர்களுக்கு மானியமாக பணத்தை தருவது. சில அரபு நாடுகளில் இன்றும் உள்ளது. ( giving money to Warriors who dead in wars)
17) குரால் பசுவை கொன்ற பாவம்- கோவில்களுக்கு வழங்கப்படும் தானங்களில் மோசடி செய்தால் அவர்களுக்கு வெள்ளை பசுவை கொன்ற பாவம் வந்து சேரும்.
இந்த வாக்கியங்களை பெரும்பாலான தமிழ் கல்வெட்டுகளில் காணலாம்.(If they cheat on donations given to temples, they will incur the sin of killing a white cow)
18) இரு பூ- தானியங்களை இரு போகமாக விளைவித்தல் (Cropping of grains in two seasons)
19) இல்வரி- இல்லத்திற்கு விதிக்கப்படும் வரி தற்போதைய வீட்டு வரி வசூலிப்பது போல (The tax levied on the house is similar to the current house tax.)
20) இளங் கூறு- இளவரசன் (PRINCE)
21)ஈழக்காசு- ஈழம் என்னும் இலங்கையில் இந்த காசு சோழ அரசன் முதலாம் ராஜ ராஜன் காலத்தில் புழக்கத்தில் இருந்தது.
This coin was in circulation in Eelam, Sri Lanka, during the reign of the Chola king Rajaraj I.
22) கழஞ்சு- பொன் அளவு ( அ) பொன் நாணயம்
Gold standard (a) Gold coin
23) மாடை- நாணய வகை ( kind of coin)
24) புதுக்காசு- புதுசாக அச்சிடப்படும் காசு (Newly printed money)
25) வராகன்- விஜய நகரர் மற்றும் நாயக்கர் கால நாணய வகை (Coinage of Vijayanagar and Nayaka period)
26) உண்ணாழிகை- கருவறை (SANCTUM SANCTORIUM)
27) உப்பாயம்,உப்பு வரி, உப்புகாசு- உப்பின் மீது விதிக்கப்பட்ட வரி (Tax on salt)
28) உரல் வரி- பண்டைய தமிழ்நாட்டில் நெல் இடிக்க பயன்படும் உரலுக்கு கூட வரி விதிக்கப்ட்டு இருந்தது.(In ancient Tamil Nadu, even the morter used to thresh paddy was taxed.)
29) உல்கு- சுங்கம் அல்லது சுங்க வரி (customs duty) முதலாம் குலோத்துங்கசோழன் "சுங்கம் தவிர்த்த சோழன் எனப்பட்டான்.
30) உவச்சர்- பூசாரி
31) உவச்சன்- கோவிலில் மத்தளம் கொட்டுபவன் ( who was Playing Drum in the Temple)
32) உள்ளாலை- உள் மண்டபம்
33) உலாவு காட்சி- வரி வகை (kind of tax)
34) உவச்சு- மத்தள வகை (kind of Drum)
35) உவா- அமாவாசை மற்றும் பௌர்ணமி (New moon and full moon)
36) உள் வரி-
37) உள்ளிட்டம்- நஷ்டம்
38) ஊர் காவல்- கிராம தலையாரி (Village headman)
39) எயில்- கோட்டை உள்ள ஊர் (Fortified town)
40) எரி மருந்தன்- வெடி மருந்து விற்பனை செய்பவன்
41) எருமை பொன்- எருமை மாட்டின் மீது விதிக்கப்படும் வரி (Tax levied on buffaloes)
42) ஏர் பொன் -உழவு வரி (Ploughing tax)
43) ஏரி மீன் காசு
44) ஒளி வண்ணார் பாறை- வண்ணார் மீது விதிக்கப்பட்ட வரி (Tax imposed on the Washermen)
45) கட்டியாணம்- நாணய வகை
46) காந்தருவி- பாடுபவள்
47) கன்று மேய் பாழ்- கன்று மேய்வதற்கான இடம்
48) விமானம்- கோவில் கருவறை மேலே கட்டப்படும் அமைப்பு
49) சிகரம்- விமானத்தின் மேலே உள்ள ஒரு உறுப்பு
50) ஒரு பூ- ஒரு போக விளைச்சல்
CONCLUSION
The words in Tamil inscriptions are explained in only one part. If necessary, they will be explained in different parts. Some inscriptions also contain Sanskrit words.
Comments